எம்.எஸ்.டோனி - கோலி கேப்டன்ஷிப் குறித்து ஜான்டி ரோட்ஸ் கருத்து

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      விளையாட்டு
Jhondy Rhodes 2019 05 14

கேப்டவுன் : இந்திய அணியில் 3 விதமான உலகக்கோப்பையையும் வென்ற பெருமை கேப்டன் டோனி வசமே உள்ளது. கேப்டன்ஷிப்பில் கோலிக்கும், டோனிக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரூட்ஸ் கருத்து தெரிவித்துள்ளா்.

ஜூன் 15ம் தேதி...

ஐ.பி.எல் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயராகி வருகிறது. முதல் போட்யில் கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்ள உள்ளது. இந்த போட்டி ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது.

திறமை வாய்ந்த வீரர்...

இந்திய அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் தான் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரூட்ஸ் கேப்டன் பொறுப்பில் கோலிக்கும், டோனிக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். டோனி எந்த ஒரு சூழலிலும் யோசித்து நிதானமாக முடிவெடுக்க கூடியவர். மனக்கட்டுபாட்டுடன் வீரர்களின் தகுதிகேற்ப முடிவெடுக்க கூடியவர். போட்டியில் நுணுக்கமாக முடிவெடுக்க கூடிய திறமை வாய்ந்த வீரர். ஆனால் விராட் கோலி போட்டியில் மிகவும் ஆக்ரேஷமாக இருப்பார். மேலும் போட்டியில் தனது முத்திரையை அவர் திணிக்க பார்ப்பார் என்று ஜான்டி ரூட்ஸ் தெரிவித்துள்ளார்.
இணைந்து வெல்லும்...
மகேந்திர சிங் டோனி கேப்டன் பொறுப்பில் இருந்த போது டி20 உலகக்கோப்பை, மினி உலகக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களை வென்றுள்ளது. இந்திய அணியில் 3 விதமான உலகக்கோப்பையையும் வென்ற பெருமை கேப்டன் டோனி வசமே உள்ளது. உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையும், டோனியின் அனுபவமும் இணைந்து வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து