முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வடக்கு பகுதி வட்ட செயலாளர் மகேந்திரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

புதன்கிழமை, 22 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரை வடக்கு  இரண்டாம் பகுதி 7-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மதுரை மாநகர் மாவட்டம் மதுரை வடக்கு 2-ம் பகுதி, 7-வது வட்டக் கழக செயலாளர் எம்.மகேந்திரன் பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியக் கழக மு்ன்னாள் அவைத்தலைவர் என்.ராமச்சந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருவேகம்பத்து ஊராட்சி சுக்கிரப்பட்டி கிளைக் கழக செயலாளர் அ. காந்தி சாலைவிபத்தில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் வருத்தமுற்றோம்.

அன்பு சகோதரர்கள் மகேந்திரன், ராமச்சந்திரன் மற்றும் காந்தி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து