தென்னாப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு

வியாழக்கிழமை, 23 மே 2019      உலகம்
President of South Africa 2019 05 23

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு செய்தனர்.

தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், அந்நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மீண்டும் தேர்வு செய்தனர். அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றி பெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து