முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணி பெற்று வெற்றி முகத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி உள்ள நிலையில் உலக தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்து விட்டீர்கள் என்று அதில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து