முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன் பட்நாயக், ஜெகன் மோகனுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஒடிசா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களை பிடித்த பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆந்திராவில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ்,  ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.
 
இந்நிலையில், அம்மாநிலங்களில் விரைவில் ஆட்சி அமைக்கவுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கு மற்றும் ஒடியா மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து