முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 உறுப்பினர்கள் குறைவால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா?

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
2019 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு  91 இடங்கள் கிடைத்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 52 தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. பாராளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை (55) கொண்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சிக்கு 3 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்போது அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை அணுகி காங்கிரஸ் வலியுறுத்திய போதும் பலன் கிடைக்கவில்லை. அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டறிந்த மகாஜன் காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவராக உள்ளார். மத்திய அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளின் நியமனங்கள் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பா.ஜ.க. அரசு அவரை அழைத்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை கொடுக்கவில்லை. இம்முறை பா.ஜ.க. கடந்த தேர்தலில் வென்றதை விடவும் அதிகமாக வென்றுள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்குமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து