போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      இந்தியா
rajnath singh 2019 06 01

புதுடெல்லி, பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தினார்.

பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள்  அறிவிக்கப்பட்டது. அதன்படி, உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து