முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்கம் இடிந்து விழுந்ததில் சீனாவில் 9 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில், அதில் பணியாற்றிய 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜிலின் லாங்ஜியாபோ சுரங்கம் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து