முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை 28-வது லீக் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுத்தாம்ப்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சவுத்தாம்ப்டனில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. முகமது ஷமி களம் இறங்குகிறார்.

ரிஷப் பந்த்...

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சவுத்தாம்ப்டனில் நடக்கும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா நல்ல நிலையில் உள்ளனர்.

காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் விலகியது பின்னடையாக கருதப்பட்டாலும் அதை இந்திய வீரர்கள் சமாளித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவானுக்கு பதில் ரி‌ஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

விஜய் சங்கர் காயம்...

பயிற்சியின்போது ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் லேசான காயம் அடைந்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடாவிட்டால் தினேஷ் கார்த்திக் அல்லது ரி‌ஷப் பந்த் இடம் பெறலாம். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். காயத்தால் அவதிப்படும் புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ‌ஷமி இடம் பெறுகிறார்.

இந்தியா ஆதிக்கம்...

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியது. நியூசிலாந்து உடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பேட்டிங், பந்து வீச்சில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் இந்தியா இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக வெல்லும். அந்த அணிக்கு எதிராக அதிக ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. 

ஆப்கான் போராட்டம்...

குல்பதீன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் இதுவரை தான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் பேட்டிங், பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. கடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை இங்கிலாந்து நொறுக்கி 397 ரன் குவித்தது. நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவரில் 110 ரன் விட்டு கொடுத்து மோசமான சாதனை படைத்தார். பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது கடினம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து