பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்: அதிபர் டிரம்ப் மறுப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      உலகம்
female journalist compliant trump 2019 06 22

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பத்திரிகையாளரான இ ஜீன் கர்ரோல், நியூயார்க் பத்திரிகையில் எழுதி உள்ள பத்தியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1995 அல்லது 1996-ம் ஆண்டு வாக்கில் டிபார்மென்ட் ஸ்டோர் ஒன்றின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து தன்னிடம் பாலியல் சீண்டலில் டிரம்ப் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் பற்றிய இது போன்ற பல விஷயங்களை விரைவில் தான் வெளியிட உள்ள hideous men என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தான் அமைதியாக இருந்தது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள டிரம்ப், இது ஒரு போலி செய்தி என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எந்த ஒரு வீடியோ பதிவோ? வேறு சாட்சிகளோ இருக்கிறதா? என்று வினவியுள்ள டிரம்ப், அந்தப்பெண்ணை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை எனவும், தனது புதிய புத்தகத்தை விற்பதற்காக இது போன்ற மலிவான விளம்பர யுக்திகளில் அந்தப்பெண் ஈடுபட்டு இருப்பதாகவும் சாடியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து