நைஜீரியாவில் ஆயுதக்குழு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      உலகம்
nigeria attack 2019 06 23

அபுஜா : நைஜீரியா நாட்டில் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியா நாட்டில் ஒரு பக்கம் போகோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம் அங்கு ஆயுதக் குழுவினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ஜம்பாரா மாகாணத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதக் குழுவினர் 50 பேர், 3 சமூகங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 18 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி.யான கபீர் மாய் பேலஸ் உறுதி செய்தார். ஆயுதக் குழுவினர், 3 சமூகத்தை சேர்ந்தவர்களை வீடுகளில் இருந்து வீதிகளுக்கு இழுத்து வந்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன. சம்பவ பகுதியில் பாதுகாப்பற்ற நிலைமை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என முகமது பாவா என்பவர் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய ஆயுதக் குழுவினரை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து