முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை 31-வது லீக் ஆட்டம்: ஆப்கான் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

சவுத்தாம்ப்டன் : சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்.

வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தாஸ் 16 ரன்னிலும், தமிம இக்பால் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ரஹிம் 83 ரன்கள்...

அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களும், ரஹிம் 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ரன்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  பின்னர் 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தன் பேட்டிங் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து