வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 20 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து விராட்கோலி புதிய சாதனை

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      விளையாட்டு
virat kohli 2019 06 27

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 20 ஆயிரம் ரன்களை அதிவேகத்தில் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.

3-வது அணியாக...

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. 34-வது ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. இந்த உலக கோப்பை போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா இருக்கிறது. 4 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

புதிய சாதனை...

நேற்றைய போட்டியில் விராட்கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை படைக்க இன்னும் 37 ரன்களே தேவைப்பட்ட நிலையில் நேற்று அந்த சாதனையை படைத்தார். முன்னதாக, கோலி 416 இன்னிங்சில் விளையாடி 19,963 ரன் எடுத்திருந்தார். அவர் ஒருநாள் போட்டியில் 11,087 ரன்னும் (223 இன்னிங்ஸ்), டெஸ்டில் 6613 ரன்னும் (131), 20 ஓவர் போட்டியில் 2263 ரன்னும் (62) எடுத்து உள்ளார்.

417 இன்னிங்சில்..

20 ஆயிரம் ரன்னை விராட்கோலி தனது 417-வது இன்னிங்சில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் டெண்டுல்கர், லாரா சாதனையை முறியடித்துள்ளார். இருவரும் 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தார். இதன் மூலம் இந்த ரன்னை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது பேட்ஸ் மேன் என்ற பெருமையை கோலி பெற்றார்.

11 ஆயிரம் ரன்...

டெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்ந்து 34,357 ரன் எடுத்து (782 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 24,208 ரன்னுடன் (509 இன்னிங்ஸ்) 6-வது இடத்தில் உள்ளார். இவர்கள் வரிசையில் கோலியும் இணைகிறார். சங்ககரா (28,016 ரன்) 2-வது இடத்திலும், பாண்டிங் (27,483) 3-வது இடத்திலும் உள்ளனர். கோலி ஏற்கனவே இந்த தொடரில் 11 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து இருந்தார்.

72 ரன்கள்...

30 வயதான விராட்கோலி இந்த உலக கோப்பை தொடரில் 3 அரை சதத்துடன் 244 ரன் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்னும், பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்னும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67 ரன்னும் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 72 ரன்கள் எடுத்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து