ஆப்கனில் நடந்த வான் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியானார்கள்

காபூல் : ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
நேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் படையினர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரைவழியாகவும், வான் வழியாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாக்டியா மாகாணத்தின் கார்டாசிரா மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.ராணுவ வீரர்களின் இந்த அதிரடி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments