முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரணியில் அமெரிக்க எம்.பி. கமலா ஹாரிஸ் உற்சாக நடனம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற எல்.ஜி.பி.டி. சமூகத்தினரின் பேரணியில் அமெரிக்க எம்பியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் உற்சாக நடனமாடியுள்ளார்.

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர். ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார். மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியில் இவரது பெயரும் இடம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று எல்.ஜி.பி.டி. சமூகத்தினர் நடத்திய ‘ப்ரைட் பரேட்’ பேரணியில் கமலா ஹாரிஸ் கலந்துக் கொண்டார். மேலும் வானவிலைப்போன்ற வண்ண நிறங்களுடன் சட்டை அணிந்து, மேடையில் பேசி, பின்னர் அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து