முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமே போட்டி - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட்டார். ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. 

இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-8-2019 அன்று நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து