தமிழக சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி 19-ம் தேதி திறந்து வைக்கிறார்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
TN assembly 2018 10 12

தமிழக சட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை வரும் 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் நேரமில்லா நேரத்தின் போது சபாநாயகர் தனபால் அவைக்கு ஒரு அறிவிப்பை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

விடுதலைப் போராட்ட வீரரும் தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் வரும் 19-ம் தேதி மாலை 5-30 மணிக்கு சட்டசபையில் திறந்து வைக்கப்படும். என்னுடைய தலைமையில் ( சபாநாயகர் ) துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையே இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசன் நேற்று நேரில் வழங்கினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து