ரூ.400 கோடி மதிப்பிலான மாயாவதி சகோதரரின் இடத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      இந்தியா
Income-Tax 30-08-2018

கொல்கத்தா, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சகோதரர் ஆனந்த் குமாரின் ரூ. 400 கோடி மதிப்பிலான இடத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி அருகே நொய்டாவில் 7 ஏக்கர் பரப்பிலான இடத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனந்த் குமாரை சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக மாயாவதி நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பினாமி சொத்து தொடர்பான விசாரணையின் போது சொத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து