முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான்வெளி மூடல்: இந்தியாவின் கட்டுப்பாடுகளால் பாக். கிற்கு இழப்பு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

கராச்சி : இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு போட்டு அழித்து பதிலடி கொடுத்தன.

இந்த தாக்குதலால் அதிர்ந்து போன பாகிஸ்தான், தன் வான்வெளியை மூடியது. நான்கரை மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 16-ம் தேதி அதிகாலை திறந்தது. இந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய விமானங்கள் சுற்றிச் செல்ல நேரிட்டது. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ. 491 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார். மேலும், இது தங்கள் நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இதுபோன்ற தருணங்களை தடுத்து இணக்கமாக நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் அவசியம் என்று அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து