முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சந்திராயன்-2 இன்று பகல் 2.43 மணிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது,
கடந்த 15-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட தொழில்¬நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. எல்லா பணிகளும் நிறைவடைந்து விண்கலம் நல்லபடியாக உள்ளது. ஒத்திகையும் நல்லப்படியாக நடந்து உள்ளது. இன்று (நேற்று) மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் தொடங்கியது. சரியாக பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். பணிகள் நல்லபடியாக நடந்து கொண்டு இருப்பதால் நல்லபடியாக விண்ணில் ஏவப்படும்.
சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பின் 48 நாட்களுக்கு பிறகு சந்திரனை சுற்றி வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். அதன் பின்னர் யாரும் இறங்காத இடமான தெற்கு துருவ பகுதியில் இறங்கும்.
கடந்த முறை தொழில்¬நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்ததும் கவுண்டனை நிறுத்தி விட்டோம். அதன் பிறகு சோதனைகள் பல நடத்தப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் தொழில்¬நுட்ப கோளாறு ஏற்பட சாத்தியமில்லை.
சந்திராயன்-2 தெற்கு துருவ பகுதியில் இறங்குவதால் இந்தியாவிற்கு விஞ்ஞான ரீதியாக நிறைய தகவல்கள் கிடைக்க சாத்திய கூறுகள் உள்ளன. உலக அரங்கில் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன் -1 கண்டுபிடித்தது. அது¬போல் சந்திராயன் -2 நிறைய சோதனைகள் செய்ய பயனாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சந்திராயன்-2 எப்போது ஏவப்படும் என்று ஆவலுடன் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து