முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம் - டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்வு

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாநில அரசின் உத்தரவையடுத்து யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவசரமாக சொந்த ஊர் திரும்ப ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்த நிலையில், அங்கு அமர்நாத் யாத்திரை மற்றும் மச்சாயில் மாதா யாத்திரை பக்தர்களையும் மற்ற சுற்றுலா பயணிகளையும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளன. ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 10000 முதல் 22000 வரை வசூலிக்கப்படுகின்றது. வழக்கமான கட்டணத்தை விட இது ரூ. 3000 அதிகமாகும்.

ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு செல்வதற்கான கட்டணம் ரூபாய் 16000 வரை வசூலிக்கப்படுகின்றது. இதே போன்று அமிர்தசரஸ், சண்டிகார், ஜெய்ப்பூர் செல்வதற்கான கட்டணங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. இணையதளங்களில், அடுத்து வரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஸ்ரீநகரிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் விமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், மக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற பதற்றத்தில் உள்ளனர். ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்ல 12000 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து