பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      இந்தியா
pm modi 2019 06 30

புது டெல்லி : டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் சொந்த ஊர் திரும்பி வரும் வேளையில், அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பூஞ்சில் அதிவிரைவுப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை 7 மணிக்கு பா.ஜ.க.வில் பொது செயலாளர்கள் கூட்டம் செயல் தலைவர் நட்டா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து