நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா: 3,000 பேருக்கு அன்னதானம்

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
13 gents kovil

நத்தம்.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பிரசித்திபெற்ற பொன்னர் சங்கர் கோவில் அருகில் மகாமுனி, நல்ல தங்கா, குட்டி கருப்பன்  ஆகிய தெய்வங்கள் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்கள் மட்டும் கிடாய் வெட்டி வழிபடும் படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் சுவாமி மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டு கிடாவுடன் சாமியாட்டம் ஆடி பொன்னர் சங்கர் கோவிலுக்கு  ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது.  பின்னர் மஞ்சள் தண்ணீர் தெளித்து  கிடாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக 50 கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டிய  கிடாய்களை உரிக்காமல் பனை ஓலைகளையும், தென்னை மட்டை களையும் தீ வைத்து வாட்டியபின் மஞ்சள் தடவிய தண்ணீரில் சுத்தமாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி பெரிய சமையல் பாத்திரத்தில் சமைக்கப்பட்டது. தொடர்ந்து  நள்ளிரவு 12 மணிக்கு படையல் நடந்தது.பொன்னர் சங்கர் கோவில்,  மகாமுனி சுவாமி சிலை பொன்னர் சங்கர் கோவிலுக்கு பின்னால்  எரிசோறு எறியப்பட்டது. அந்த நேரத்தில்
படையல் நடக்கும் போது ஆண்கள் சத்தமோ, வெளிச்சமுள்ள எந்த பொருட்களையும் உபயோகிக்க கூடாது.  குறிப்பாக பெண்கள் அந்தப் பக்கமே வரக்கூடாது. பின்னர் பொன்னர் சங்கருக்கு சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பீடத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள், பூஜை செய்யப்பட்டது.இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட 3000 பேருக்கு கிடாய் கறி அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பெண்கள் யாரும் வரக்கூடாது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பாத சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து