முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் கையேடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு இலவச கையேடுகளை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தமிழக அரசின்  வேலைக்கான போட்டித் தேர்வுகளை திறம்பட தயாராவதற்கான இலவச  பயிற்சி முகாமை  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி கையேடுகளை இலவசமாக வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை,கோவை,திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்திடும் இளைய சமுதாயத்தினருக்கு  தமிழக அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பல்வேறு வசதிகள் எளிதாக கிடைத்து வருகிறது.எனினும் கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி மற்றும் வசதிகள் குறைவாக உள்ளது.இந்த குறையினை போக்கிடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசித்திடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தமிழக அரசின்  வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு  தயாராகிடும் வகையில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழக அரசின் போட்டித் தேர்வுகளை சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதில் தமிழகத்தின் தலைசிறந்த மற்றும் அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு இரண்டாவது வாரமாக திருமங்கலம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமின் துவக்க விழா திருமங்கலம் பயணியர் மாளிகையில் நேற்று காலை வெகுசிறப்புடன் நடைபெற்றது.
அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக தயாராகி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்ற இந்த இரண்டாவது வார இலவச பயிற்சி முகாமினை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று தொடங்கிவைத்து சிறப்புரை யாற்றினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் டி.எஸ்.ராஜசேகர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி கையேடுகளை இலவசமாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ராஜசேகர் தலைமையிலான பேராசிரியர் குழவினர் மற்றும் மதுரை பிரீத்தி மருத்துவமனை நிறுவனர் டாக்டர். சிவக்குமார்,கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம், பழனிச்சாமி,சிவஜோதி தர்மர்,சீதா ஆறுமுகம்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன்,சிவன்காளை,பாஸ்கரன்,நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,நாகலட்சுமி, மீனாலட்சுமி,தனலட்சுமி,கொடிவைரன்,பரமசிவம்,ரமேஷ்,விவேக்,நாகையாசாமி,வெல்டிங் முருகன் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று வேளை உணவுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து