முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமாநிலங்களில் தொடரும் கனமழை - 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங் களில் தொடரும் கனமழையால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த இரு நாட்களில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச் சரிவு காரணமாக 500-க்கும் மேற் பட்டோர் பரிதவிக்கின்றனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் மேகவெடிப்பு காரண மாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 20 பேரை காணவில்லை. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மூன்று இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கியவர் கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்திலும் இடை விடாது மழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தின் குருதாஸ்பூர் பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாபின் வெள்ள நிவாரண பணிகளுக்கு அந்த மாநில முதல்வர் அமரிந்தர்சிங் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார். யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதன்காரணமாக டெல்லியில் யமுனை நதியோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், அரியானா, ஒடிசா, சத்தீஸ்கரிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த மாநிலங்களின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பெய்யும் கனமழை காரணமாக அங்குள்ள தாவி நதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. அந்த நதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் நேற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். விமானப் படை வீரர் கள், ஹெலிகாப்டர் மூலம் 4 பேரை யும் பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் வடமாநிலங்களில் 50-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்டில் 20 பேரை காண வில்லை. அவர்கள் உயிரிழந்திருக் கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங் கிய தென்மேற்குப் பருவமழைக்கு இதுவரை 1,058 பேர் உயிரிழந் துள்ளனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து