ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம் : ஜோ ரூட்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Joe Root 2019 08 22

லண்டன் : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்மித் இடம் பெறாததை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டது.

இதனால் 3-வது ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில், நாங்கள் ஸ்விங் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சனை நான்கு ஓவர்களோடு இழந்து விட்டோம். அது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. தற்போது ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஸ்மித் போன்ற தலைசிறந்த வீரருக்கு எதிராக பந்து வீசும்போது, அவரை அவுட்டாக்க பல்வேறு திட்டங்களை கண்டறிய வேண்டும். ஒரு குறிப்பிட்ட அபாரமான ஸ்பெல்லை ஆர்சர் வீசி ஒரு வழியை தேடித்தந்தார். இந்த வாய்ப்பு உருவாக்கிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்றார். ஸ்மித் மூன்று இன்னிங்சில் 144, 142, 92 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து