மெக்சிகோ கிளப்பில் மர்ம நபரால் தீ விபத்து: 26 பேர் பலி

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      உலகம்
Mexico fire accident 2019 08 29

மெக்சிகோ : மெக்சிகோ கிளப்பில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தீ விபத்தில் 26 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்கள் , மெக்சிகோவில் வெரகர்ஸ் மாகாணத்தில் கிளப் ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதனைத் தொடர்ந்து தீ விபத்தை ஏற்படுத்தினார். இதில் அங்கிருந்த 26 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை தனி நபர் நடத்தினாரா? அல்லது கும்பலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது உறுதியாக இதுவரை தெரியவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது, துப்பாக்கி ஏந்திய நபர் நேரடியாக கிளப்பில் நுழைந்து சுட ஆரம்பித்தார். அவர் வெளியேறுவதற்கான நுழைவாயிலையும் அடைந்து விட்டார் என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதல் குறித்து மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் கூறும் போது, இது ஒரு அவமானகரமான தாக்குதல். இது குறித்து விரைந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மெக்சிகோவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான நாச வேலை செயலாக இது பார்க்கப்படுகிறது. மெக்சிகோவில் கடத்தல், கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க மெக்சிகோ அதிபர் லோபஸ் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து