ஹாங்காங் போராட்டம்: பிரபல சமூக ஆர்வலர் ஜோஸ்வா வோங் கைது

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2019      உலகம்
Hong Kong Joshua Wong arrest 2019 08 30

ஹாங்காங்கின் பிரபல சமூக ஆர்வலர் ஜோஸ்வா வோங் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஜனநாயக சார்பு குழு தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத போராட்டக்காரர்கள் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அமைதியான முறையிலேயே போராட்டங்கள் நடந்த போதும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி ஹாங்காங் கலவர பூமியாக மாறியது.

தொடர்ந்து 81 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சீன ராணுவ துருப்புகள் ஹாங்காங்கில் பல்வேறு படைத்தலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஹாங்காங்கின் பிரபல சமூக ஆர்வலர் ஜோஸ்வா வோங் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஜனநாயக சார்பு குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனநாயக அரசியலமைப்பு டிமோசிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது;-

எங்களது தலைவர் ஜோஸ்வா வோங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமைப்பின் உறுப்பினரான அகின்ஸ் சோவ்வும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜோஸ்வா வோங் மாணவர் குழுவின் செயலாளராகவும் மற்றும் 2014-ல் நடைபெற்ற மாபெரும் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து