முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      இந்தியா
Parliament-MP-1-2025-12-19

புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் பெயரில் இருந்து செயலாக்கம் வரை பல மாற்றங்களை அமல்படுத்தும் வகையில் ஒரு மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு 'விக்சித் பாரத் ரோஜ்கர் அஜீவிகா மிஷன்' (கிராமின்) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதி அளிப்பு திட்டம் என்ற பொருளில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இது 'வி.பி.-ஜி ராம் ஜி' திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தில் சில பலன்களும் இருக்கிறது. வேலை வழங்கும் நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்காக மத்திய அரசாங்கமே முழு தொகையையும் வழங்கிய நிலையில், மத்திய அரசாங்கம் 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் செலவழிக்க வேண்டும்.

இந்நிலையில், வி.பி.-ஜி ராம் ஜி மசோதா பாராளுமன்ற மாநிங்களவையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் பாராளுமன்றத்தில் அமர்ந்து, கோஷங்களை எழுப்பியும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து