முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர்  மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

நெல்லையில் நாளை 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110 கோடி மதிப்பில் நூலகம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார். மேலும் திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகத்தின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி அருகேயுள்ள குலவணிகர்புரம் கிராமத்தில் ரூ.56.60 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

தற்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தில், தாமிரவருணி நதிக்கரையில் அமைந்த தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கும் வகையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அரும்பொருள்களை அழகுறக் காட்சிப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்க கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளார்.

இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிட பேசுகையில், ”மொத்தம் 97% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் இந்தத் திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாகவும், பணிகளை விரைந்து முடித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நளை பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கவுள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து