முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் காஷ்மீர் நேரம் அனுசரிப்பு - ரயில்களும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டது

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக காஷ்மீர் நேரத்தை பாகிஸ்தான் அனுசரித்தது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இருநாட்டுக்கும் இடையிலான தூதரக உறவை முறித்து கொண்டது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காஷ்மீர் நேரம் அனுசரிக்கப்பட்டது. சரியாக பகல் 12 மணியான போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. சாலைகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்குகள் எரிந்தன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட, மக்கள் பேரணியை பிரதமர் இம்ரான்கான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானில் உள்ள அனைவரும் காஷ்மீர் மக்களுடன் இருப்போம். காஷ்மீர் மக்கள் மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளனர். 80 லட்சம் பேர் கடந்த 4 வாரங்களாக தடை உத்தரவுகளால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த காஷ்மீர் நேரத்தை அனுசரிப்பதற்கு காரணம் தொடர்ந்து காஷ்மீர் மக்களுடன் எப்போதும் பாகிஸ்தான் துணை நிற்கும் என்ற செய்தியை தெரிவிப்பதற்கு தான். நமது கடைசி மூச்சு இருக்கும் வரை காஷ்மீர் மக்களோடு இருப்போம் என்றார்.

கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், பாகிஸ்தான் ரயில்வேயும் இந்த காஷ்மீர் நேரத்தில் பங்கேற்று ஒரு நிமிடம் ரயில்களை நிறுத்தியது. வாரத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த போராட்டமானது பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. பொது சபையில் உரையாற்றும் செப்டம்பர் 27-ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து