முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் போதுமான அளவு மழை பொழிவு கிடைக்கவில்லை. அதன்பிறகு இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர்.

மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் தொடர்ந்து சில நாட்கள் ஓய்ந்திருந்த மழை மீண்டும் கொட்டி தீர்க்கிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மலப்புரம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் அங்கு தஞ்சமடைந்து உள்ளனர். சில மாவட்டங்களில் மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் முகாம்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த 10 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதே போல  ஆலப்புழா, இடுக்கி, கண்ணூர், காசர் கோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. மழையின்போது பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து