முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெகபூபா முப்தியை பார்க்க மகளுக்கு அனுமதி: சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள மெகபூபா முப்தியை பார்க்க அவரது மகளுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்பும் பலமடங்கு பலப்படுத்தப்பட்டது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமல் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திக்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு செல்ல முயன்ற அரசியல் கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீரில் உள்ள தனது கட்சியை சேர்ந்த முகமது யூசுப்பை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீருக்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் சனா இத்ஜா சுப்ரீம் கோர்ட்டில் தனது தாயை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை அவர் சார்பில் வக்கீல் அகர்ஷ் கம்ரா தாக்கல் செய்தார். அதில், எனது தாய் மெகபூபா முப்தி உடல்நிலை குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. அவரை நான் நேரில் சந்தித்து ஒரு மாதமாகிறது. அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகிறார்கள். எனவே எனது தாயை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி காஷ்மீருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதை தனது மனுவில் மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீர் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை, அவரது மகள் சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னையில் இருக்கும் சனா இத்ஜா தனது தாய் மெகபூபாவை சந்திக்க ஸ்ரீநகருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து