முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திராயனுக்காக 130 கோடி இந்தியர்களும் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்: பிரதமர்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

130 கோடி இந்தியர்களும் உற்சாகத்துடன் இங்கு காத்து இருக்கின்றனர். சந்திரயான் தனது இலக்கை எட்டி சந்திரனில் தரையிறங்க இன்னும் சில மணி நேரங்கள் தான் உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் விண்கலம் பின்னர் இதில் இருந்து விலகி, நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. பின்னர் பல நிலைகளை அடைந்து தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சந்திரயான் விண்கலம் அடைந்துள்ளது.

48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி இன்று (செப்டம்பர் 7) அதிகாலை நிலவில் மெதுவாக தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலவில் சந்திரயான் இறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் காண உள்ளார்.
இந்தநிலையில் சந்திரயான் பயணம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
130 கோடி இந்தியர்களும் உற்சாகத்துடன் இங்கு காத்து இருக்கின்றனர். சந்திரயான் தனது இலக்கை எட்டி சந்திரனின் தெற்கு முனையில் தரையிறங்க இன்னும் சில மணிநேரங்கள் தான் உள்ளன. நமது விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவும், உலகின் மற்ற நாடுகளும் மீண்டும் ஒருமுறை காண போகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து