முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு பாதியாக குறைப்பு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு  : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் 53,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 5,000 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.740 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 டி.எம்.சி.யாக இருக்கிறது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணை வழியாக முக்கொம்பு சென்றடைகிறது. தற்போது மாயனூர் கதவணைக்கு, நீர் வரத்து வினாடிக்கு 76 ஆயிரத்து 100 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 75 மதகுகள் வழியாக வினாடிக்கு 74 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரியிலும், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை பாசன வாய்க்காலில் 800 கனஅடி என வினாடிக்கு மொத்தம் 76 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து