எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை, அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த சந்திப்பின் போது வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவும் உடன் இருந்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.
ஹைதராபாதில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் செளஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ஹிமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா சட்டப் பேரவைத் தலைவர் போசாராம் ரெட்டி, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரத்தின் ஆளுநராக இருந்த இ.எஸ்.எல். நரசிம்மன், இரு மாநிலங்களுக்கும் கவர்னராக பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, தெலுங்கானாவின் அடுத்த கவர்னராக, தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜனை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |