முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ம் ஆண்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்: அமித்ஷா

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

குருகிராம், : இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரியானாவில் முதல் முறையாக தனிமெஜாரிட்டியுடன் ஆளும் கட்சி பா.ஜ.க. உள்ளது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. தன் ஆட்சியை தக்க வைக்க முயல்கிறது.

இந்நிலையில், குருகிராமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை, ராகுல் ஏன்? எதிர்க்கிறார். இந்தியாவில் குடியேறியவர்களை  வெளியேற்ற கூடாது, வெளியேற்றினால் அவர்கள் எங்கு வாழ்வார்கள் என ராகுல் மற்றும் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கவலைப்படுகிறார்கள். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நினைத்து இவர்கள் ஏன் கவலைப்பட  வேண்டும். 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

1990 முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது மட்டும், 40 ஆயிரம் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனாலும், அவர்கள் 370-வது பிரிவை நீக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு நீக்கியதற்கு பல்வேறு கட்சியினர்  ஆதரவளித்தாலும் காங்கிரஸ் கட்சி எதிர்த்தது என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர்  370-வது பிரிவு நீக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து