பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      இந்தியா
rahul 2019 03 03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.  

பொதுத்துறை நிறுவனங்களை விற்பவர் என்ற பொருளில், ‘பெச்சேந்திர மோடி’ என்ற பெயரை அதில் பயன்படுத்தி உள்ளார்.

“பல ஆண்டு கடின உழைப்புக்கு பிறகு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ‘பெச்சேந்திர மோடி’ தனது கோட்-சூட் அணிந்த நண்பர்களுடன் சேர்ந்து பாழ்படுத்தி வருகிறார். அதனால், லட்சக்கணக்கான பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடையே அச்சமும், நிச்சயமற்ற நிலைமையும் காணப்படுகிறது. அவர்களுடன் தோளோடு தோள் நின்று நான் போராடுவேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து