முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். முறைகேடு: அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கோரி சிதம்பரம் மனு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ. 305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவர் மீதும் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு,  சுப்ரீம் கோர்ட் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே சி.பி.ஐ. வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு, டெல்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது   7 நாள் காவலில் தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் 24-ல் முடியும் நிலையில், அன்றைய தினம் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து