முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கும்பகோணம் : சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்திருத்தலம் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 28-ம் தேதி காலை சண்முகசுவாமி நவவீரர்கள், பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினர். விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதிவுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 11 மணி்க்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாரதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பட்டு அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (3-ம்தேதி) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், இணை ஆணையர் சிவக்குமார், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து