முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஷென்ஜென் : பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறினார்.

49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஊதா பிரிவில் நேற்று முன்தினம் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) நேற்று முன்தினம்  7-5, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் மாற்று ஆட்டக்காரர் சோபியா கெனினை (அமெரிக்கா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 10 நிமிடங்கள் நீடித்தது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே வீராங்கனையான ஸ்விடோலினா அரைஇறுதியில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) நேற்று சந்தித்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) போராடி சாய்த்தார். 2-வது வெற்றியை பெற்ற பிளிஸ்கோவா தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதி சுற்றில் அவர் நம்பர் ஒன் மங்கை ஆஷ்லி பார்டியுடன் (ஆஸ்திரேலியா) மோதுகிறார். விம்பிள்டன் சாம்பியனான ஹாலெப் ஒரு வெற்றி, 2 தோல்வியோடு நடையை கட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து