முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது: சித்தராமையா

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.  

சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து மாநாடு நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்து பா.ஜனதா அரசு அமைத்து உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவுப்படிதான் ஆபரேஷன் தாமரை நடந்தது என்று உப்பள்ளியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகியுள்ளது. இது பா.ஜனதா கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.

பா.ஜனதா பின் வாசல்வழியாக கர்நாடகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. எடியூரப்பா, ஈசுவரப்பாவிடம் இல்லாத பணமா?. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீடுகளில் இருக்க போகிறது?. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அவர்களது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதன் பிறகு சிறைக்கு அனுப்புகிறார்கள். இது ஆணவ போக்கு. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த மாநாட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், எஸ்.ஆர்.பட்டீல், கிம்மனே ரத்னாகர், பத்ராவதி எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து