முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் - நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

தாகா : வங்காளதேசத்தில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.   

வங்காளதேசத்தில் தெற்கு துறைமுக நகரமான சிட்டாகாங் சென்று கொண்டிருந்த ரெயிலும் தலைநகர் தாகாவிற்கு சென்று கொண்டிருந்த ரெயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தாகாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மன்பாரியா மாவட்ட பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ரெயில் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ரெயில்களின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.

இந்த விபத்தில் 16 பயணிகள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து