முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் அளிக்க கவர்னர் மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 மும்பை : மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளிப்பதற்கு கவர்னர்  கூடுதல் அவகாசம் வழங்காததை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

மகாராஷ்டிராவில் பா.ஜ.க-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும் சிவசேனாவின் அதிரடி நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. தனிபெரும் கட்சி என்ற முறையில் முதலில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், பா.ஜ.க ஆட்சியமைக்கப் போவதில்லை என கூறிவிட்டது.

இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்க அவகாசம் வழங்கினார். ஆனால், அந்த காலக்கெடுவுக்குள் சிவசேனாவால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை வழங்க முடியவில்லை.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, கூடுதல் அவகாசம் அளிக்கும்படி சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவகாசம் அளிக்க மறுத்த கவர்னர், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். 

இதனால் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. அத்துடன், கவர்னரின்  முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சிவசேனா தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து