முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் அதிபர் தேர்தலையையொட்டி வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியான மன்னாரில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரம் இல்லை. மேலும் தாக்குதல் நடத்தியவர் சாலையில் வாகனங்களின் டயர்களையும் எரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இலங்கையின் 8-வது அதிபரைத் தேர்ந்தெடுக்க நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனால் அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து