swim dress free petrol  2019 11 20

மாஸ்கோ, : ரஷியாவில் நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை அறிவிக்கப்பட்டது.  

ரஷியாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார். 

அதன்படி பெட்ரோல் நிலையம் திறந்த பிறகு முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை பெற்று செல்வார்கள். இதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமான இடமாக மாறி மக்களிடம் பிரபலமாகிவிடும் என உரிமையாளர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. இலவச பெட்ரோல் குறித்த விளம்பரம் வெளியானதும் ஏராளமான ஆண்கள் நீச்சல் உடையை அணிந்து கொண்டு பெட்ரோல் நிலையத்துக்கு வந்தனர்.

நீச்சல் உடை அணிந்து வர வேண்டியவர்கள் ஆண்களா, பெண்களா என விளம்பரத்தில் குறிப்பிடாததால் பெட்ரோல் நிலையத்தில் பெண்களை விட ஆண்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் திணறிப்போனார்கள். சலுகைக்கான கால அவகாசம் முடிந்த பின்னரே அவர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இதற்கிடையே ஆண்கள் நீச்சல் உடையில் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


முகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்



பிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



ஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review



அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber Attack



YAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review



தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milk



ஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்



தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்



எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya



இள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18



Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner



Kanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17



Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01



பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees



வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து