முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்சே பற்றி சர்ச்சைப் பேச்சு: நடிகர் கமலஹாசன் மீதான வழக்கு விசாரணை டிச.9-க்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் கோட்சே பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமலஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமலஹாசன் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மே மாதத் தொடக்கத்தில் கலந்து கொண்ட கூட்டமொன்றில் பேசும் போது, சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியதாக அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது. கமலஹாசன் பேசிய கருத்துகள் மதங்களுக்கிடையில் பகைமையை ஊக்குவிக்கிறது. தனது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்திருந்தார். கமலஹாசனுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை நேற்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் அடுத்த விசாரணையின் போது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிபதி சம்மீத் ஆனந்த் இந்த புகார் மனு மீதான அறிக்கையைப் பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து