முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் தீவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு கல்விச்சுற்றுலா.

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-   தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில்  ராமேசுவரம் தீவுப்பகுதியில்  அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிடுவதற்காக  பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு கல்விச்சுற்றுலாவாக  அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவகம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நேற்று அழைத்து சென்றனர்.
 தமிழகம் முழுவதும் சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவித்திறனை ஊக்குவித்து மேம்படுத்தும்,சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களை கண்டு களித்து தகவல்களை கற்றறிந்திட ஏதுவாகவும், மனதளவில் புத்துணர்ச்சி பெறும் வகையிலும் விதமாகவும்,  வரலாற்று சிறப்பு மிக்க   சுற்றுலா தளங்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு  கல்விச்சுற்றுலாவாக   அழைத்து செல்ல தமிழக அரசு அதிகாரிகளுக்கு  ஆலோசணை வழங்கியது.அதன்  ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில்  ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 15 அரசு பள்ளிகளில் நன்றாக படித்த 180 மாணவ,மாணவியர்களை தேர்வு செய்து ஒருநாள் விழிப்புணர்வு கல்விச்சுற்றுலாவிற்கு தயார் படுத்தினர்.அதன் பேரில் நேற்று காலையில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி   இந்த கல்விச்சுற்றுலா  பயணம்  தொடங்கியது.இந்த மாணவர்கள்  பயணம் செல்லும் 3 பேருந்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் காலை 9 மணிக்கு பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.அங்கிருந்து  சுற்றுலாத்துறை அலுவலர் வெங்கடஜலாபதி தலைமையில்  கல்விச்சுற்றுலா பேருந்து புறப்பட்டு  ராமேசுவரம் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம்  தேசிய நினைவகத்திற்கு காலை 11 மணிக்கு வந்தது.அங்கு மாணவர்கள்  நினைவகத்தில் அமைந்துள்ள  அப்துல்கலாம் சமாதி,உருவச்சிலை,அப்துல்கலாம் பயன்படுத்திய ஆடைகள்,படித்த புத்தகங்கள்,பங்கிட்ட ஏவுகனுங்கள்,வரைபடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  பாம்பன் குந்துகால் பகுதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மணிமண்டபத்திற்கும்,பாம்பன் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.பின்னர்  மண்டபம் கேம்ப் பகுதியிலுள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி மையம் பகுதியிலும், அரியமான கடற்கரை, திருப்புல்லாணி பகுதியிலுள்ள  ஆதி ஜெகநாதர் திருக்கோவில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.பின்னர் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை பகுதிகளுக்கு சென்று கல்விச்சுற்றுலாவை முடிப்பாதாகவும்,சுற்றுலா நிகழ்ச்சி இறுதியில் மாணவ, மாணவியர்களிடையே வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் ராமேசுவரம் சுற்றுலாத்துறை அலுவலர் முத்துச்சாமி தெரிவித்தார். இந்த  கல்விச்சுற்றுலாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி சுற்றுலாத்துறையை சேர்ந்த 5 உதவி சுற்றுலா அலுவலர்கள்,மற்றும் 15 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து