முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: அரையிறுதியில் கனடா

சனிக்கிழமை, 23 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பிரான்ஸ் : டேவிஸ் கோப்பை பைனல்ஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு கனடா தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸுடன் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நட்சத்திர வீரா் நோவக் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் பெனாய்ட் பேயரையும், பிலிப் கிராஜினோவிக் 7-5, 7-6 என ஜோ வில்பரட் சோங்காவையும் வீழ்த்தினா். முதல் நிலை அணியாக கருதப்பட்ட பிரான்ஸ் முந்தைய 10 போட்டிகளில் தொடா்ந்து தகுதி பெற்றது. கடந்த முறை இறுதிச் சுற்றில் தான் குரோஷியாவிடம் தோல்வியைத் தழுவியது. ஸ்பெயின், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, பிரிட்டன் அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற செட் கணக்கில் வென்றது கனடா.போஸ்பிஸில் 7-6. 6-4 என ஆஸி. வீரா் ஜான் மில்மேனை ஒற்றையா் ஆட்டத்தில் வென்றாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா் 3-6, 6-3, 7-5 என ஷபவலோவை வீழ்த்தினாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.இரட்டையா் பிரிவில் கனடாவின் போஸ்பிஸில்-ஷபவலோவ் இணை 6-4, 6-4 என ஆஸி. இணை ஜான்-ஜோா்டானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து