முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர பெண் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்க தவறிய 3 போலீசார் சஸ்பெண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, கடந்த புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  ஷாட்நகர் அருகேயுள்ள டோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான லாரி எண்களை அடிப்படையாக வைத்து லாரி டிரைவர் முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பிரியங்கா ரெட்டியை திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று பின்னர் அவரது உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்தது தெரியவந்தது.

இந்நிலையில், பிரியங்கா காணாமல் போனதாக அவரது தாயார் அளித்த புகாரை உரிய நேரத்தில் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்காமல் மெத்தனமாக இருந்ததற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரு போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சைபராபாத் பகுதி போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் புகார்கள் வந்தால் காவல் நிலைய எல்லைகளை கடந்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து